என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ரெயில்வே ஊழியர்கள் சலுகை"
சென்னை:
தென்மண்டல எஸ்.சி., எஸ்.டி. பிரிவு ரெயில்வே தொழிலாளர்கள் மகாசபை கூட்டம் பெரம்பூரில் இன்று நடந்தது. பொதுச்செயலாளர் ஞானசேகரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் கலந்து கொண்டு பேசியதாவது:-
ரெயில்வே துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பல சலுகைகளை மோடி அரசு பறித்து இருக்கிறது. தொழிலாளர்களின் சலுகைகளை அரசு மீண்டும் வழங்க வேண்டும்.
அதேபோல் ரெயில்வே பட்ஜெட்டை பொது பட்ஜெட்டுடன் இணைத்தது தவறு. இந்த துறையை தனியார் மயமாக்கும் எண்ணத்தை கைவிட வேண்டும்.
இடஒதுக்கீடையும் குறைக்க கூடாது. தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைக்கு த.மா.கா. என்றும் துணை நிற்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் த.மா.கா. துணைத் தலைவர் கோவை.தங்கம், தொழிலாளர் யூனியனின் அகில இந்திய நிர்வாகிகள் பைரவா, அர்னோட்டியா, த.மா.கா. நிர்வாகிகள் ஜவகர்பாபு, விடியல் சேகர், டி.என்.அசோகன், டி.எம்.பிரபாகர், விக்டரிமோகன், சி.ஆர்.வெங்கடேஷ், பிஜு சாக்கோ, பி.எம். பாலா சைதை மனோகரன், கல்யாணி, குமாரராஜ், தொழிற்சங்க நிர்வாகிகள் ஜேம்ஸ், ராமகிருஷ்ணன், ராயபுரம் பி.எம்.பாலா உள்பட பலர் கலந்து கொண்டனர். gkvasan #railwayemployees pmmodi